spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லை: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்.. நண்பனை தப்ப வைக்க போட்ட திட்டமா??

நெல்லை: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்.. நண்பனை தப்ப வைக்க போட்ட திட்டமா??

-

- Advertisement -
நெல்லை: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்.. நண்பனை தப்ப வைக்க போட்ட திட்டமா??
நெல்லையில் காவல் நிலையம் உள்ளிட்ட 3 பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் மேலும் இருவர் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன் உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று முன்தினம் ஊர் உடையான் குடியிருப்பு காட்டுப் பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது அப்பகுதில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தச்சநல்லூர் காவல்துறையினர் , இந்த கும்பலை பார்த்து பிடிக்க முயன்றனர்.

அதில் அருண்குமார் மற்றும் ஹரிஹரசுதன் இருவரும் போலீஸிடம் சிக்கிய நிலையில், அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 5 கிராம் கஞ்சா மற்றும் ஒரு அரிவாள் இருந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தச்சநல்லூர் போலீஸார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க அழைத்துச்சென்றனர்.

we-r-hiring

நண்பர்களை கைது செய்த ஆத்திரத்தில் இருந்த அருண்குமாரின் சகோதரர் அஜித்குமார் மற்றும் ஹரிஹரசுதனின் நண்பர்களான 5 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து தச்சநல்லூர் காவல் நிலைய வாசல் பகுதியில் இருக்கும் கோவில் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். தொடர்ந்து தச்சநல்லூர் சோதனை சாவடி உள்பட அடுத்தடுத்து 3 இடங்களில் 4 பெட்ரோல் குண்டை வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர்.

தகவல் அறிந்த தச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் தேடி வந்தனர், அப்போது அவர்களின் ஒருவரான ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த சரண் என்ற வாலிபரை நேற்று கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் அஜித்குமார் மற்றும் பெருமாள் ஆகிய இருவரையும் தாழையூத்து காவல்துறையினர் கைது செய்து கைதாகி இருக்கும் நண்பனை தப்ப வைக்க போட்ட திட்டமா  என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

MUST READ