spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறிய காசோலை சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் – செல்வப்பெருந்தகை

வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறிய காசோலை சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் – செல்வப்பெருந்தகை

-

- Advertisement -

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறை, வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் தலைவலியாக மாறியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.வாடிக்கையாளா்களுக்கு பெரும் தலைவலியாக மாறிய காசோலை சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் – செல்வப்பெருந்தகை மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசோலைகள் ஒரே நாளில் தீர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தொழில்நுட்ப குறைபாடுகள், தரமற்ற ஸ்கேன் மற்றும் புதிய முறைக்குப் பயிற்சி பெறாத ஊழியர்கள் காரணமாக, பல காசோலைகள் நான்கு நாட்களுக்கும் மேலாகத் தாமதமாகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அனைத்து காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குலைக்கும் இந்த அலட்சியத்திற்கு ஆளும் ஒன்றிய பாஜக அரசாங்கமும், ஆர்பிஐ-யும் பொறுப்பு ஏற்று விளக்கம் தர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்“ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

we-r-hiring

 

MUST READ