spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநெருங்கும் தீபாவளி…தீ விபத்தை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுரை... 

நெருங்கும் தீபாவளி…தீ விபத்தை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுரை… 

-

- Advertisement -

பட்டாசு வெடிக்கும்போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளாா்.நெருங்கும் தீபாவளி…தீ விபத்தை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுரை... 

பட்டாசு வெடிக்கும்போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளாா். இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அனுப்பியுள்ளார். வரும் 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இது தொடர்பாக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அதன்படி, பட்டாசுகள் கொளுத்துமிடத்துக்கு அருகாமையில் வாளியில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக் கொண்டோ அல்லது உடலுக்கு அருகாமையிலோ வெடிக்க கூடாது. மூடிய பெட்டிகள், பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கச் செய்யவதை தவிர்க்க வேண்டும்.

பட்டாசுகளை கூட்டமான பகுதிகள், தெருக்கள் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்போ, அருகிலோ வெடிப்பதை தவிருங்கள். மேலும், பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருக்கும் இடங்களிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளாா்.

சிபிஐ விசாரணையை எப்போதும் ஏற்க மாட்டோம்…இது மாநில தன்னாட்சிக்கான அவமதிப்பு – சீமான் கடும் விமர்சனம்

MUST READ