spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஏ.ஆர் ரகுமான் இசையில் வசனமில்லா திரைப்படம்… உலகெங்கும் நாளை வெளியீடு

ஏ.ஆர் ரகுமான் இசையில் வசனமில்லா திரைப்படம்… உலகெங்கும் நாளை வெளியீடு

-

- Advertisement -

ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் மொழி,வசனம் இல்லாமல் நகைச்சுவை-த்ரில்லர் படமான  “உஃப் யே சியாபா” நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.ஏ.ஆர் ரகுமான் இசையில் வசனமில்லா திரைப்படம்… உலகெங்கும் நாளை வெளியீடுலவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குனர்  ஜி. அசோக் இயக்கிய “உஃப் யே சியாபா” திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

இது ஒரு  நகைச்சுவை-த்ரில்லர் படம், எந்த வசனங்களும் இல்லாமல் நகைச்சுவைகள் மற்றும் ஏ.ஆர். ரகுமானின் உற்சாகமான இசையை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது.

we-r-hiring

ஒரு வசனம் கூட இல்லாமல் நடிகர்கள்  சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா ஃபதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அதுவும் முழுக்க நகைச்சுவை படமாக வந்திருக்கிறது. இந்த படத்திற்கு இசையையும், நடிகர்களின் வசனமில்லாத நடிப்பையும் மட்டும் நம்பி எடுத்திருக்கிறார்கள்.

இந்த படம் ரகுமானுக்கு இது ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் இருந்திருக்கிறது. இது குறித்து அவர் கூறியதாவது.” இப்படத்தில்  பணிபுரிவது சவாலானதாகவும், சுதந்திரமாகவும் இருந்தது. பெரும்பாலான படங்களில், வசனங்கள் முன்னுரிமை பெறுகின்றன, இசை ஒரு படி பின்வாங்குகிறது, ஆனால் இங்கே, இசையே கதையின் ஒரு பகுதியாகும். புதிய பாணிகளைப் பரிசோதிப்பதை நான் உண்மையிலேயே ரசித்தேன், குறிப்பாக இந்த நகைச்சுவை-த்ரில்லர் வகை படமாக இருந்தது கூடுதல் சவாலாகவும் இருந்தது.

லவ் ரஞ்சன் மற்றும் இயக்குனர் அசோக்குடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களின் இந்த முயற்சி  வெற்றி பெரும் விதமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளாா்.

இயக்குனர், ஜி. அசோக்  பாகமதி , மற்றும் துர்காமதி போன்ற படங்களை இயக்கியவர் .  “உஃப் யே சியாபா” மூலம், நவீன பார்வையாளர்களுக்கு அமைதியான கதைசொல்லலில் ஒரு துணிச்சலான பாய்ச்சலை மேற்கொள்கிறார். டார்க் காமெடி வகையான இந்த திரைப்படம், சிரிப்பையும் சஸ்பென்ஸையும் மட்டும் வைத்து ஒரு புதிய   சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறது. நவீன பாலிவுட்டில்  இதுபோன்ற படங்கள் வருவது அறிது.

இது பல வருடங்களுக்குப்பிறகு இந்தியாவில் உருவாக்கும்  படம். திரு கமல்ஹாசன் நடிப்பில் ஏற்கனவே இது போன்ற வசனங்கள் இல்லாத படம் வெளி வந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் சோதனை முயற்சிகள் புதிதல்ல,  தமிழில் ஏற்கனவே இந்த முயற்சி செய்ப்பட்டிருந்தாலும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு முயற்சியை  இந்த தலைமுறையினருக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இப்படி ஒரு படம் வருவது மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. ரஹ்மானின் பின்னணி இசை  வெறும் பின்னணி மட்டுமல்ல – அது படத்தின் குரல். அவரது இசை உணர்ச்சிகளை வழிநடத்துகிறது, பதற்றத்தை உருவாக்குகிறது, உரையாடல்  இல்லாத நகைச்சுவையை உணர வைக்கிறது.

மொழி இல்லாத படமாக இருப்பதால் எல்லா மாநிலங்களிலும், எல்லா நாடுகளிலும் இந்த படத்தை தயக்கமின்றி வெளியிடுகிறோம் என்கிறார்கள் படக்குழுவினர்.

நிவின் பாலி நடிக்கும் ‘பேபி கேர்ள்’…. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

 

MUST READ