(செப்டம்பர்-05) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை மெல்ல மெல்ல அதிகரித்து நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 03 ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,440க்கும், கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,805க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சற்றே குறைந்த தங்கம் கிராமிற்கு ரூ.10 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,795-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.78,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டு வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. அதாவது சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.70 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,865-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.78,920-விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை எந்த மாற்றமின்றி. ஒரு கிராம் வெள்ளி ரூ.137-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்தால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள், நடுத்தர வர்க்கத்தினரை அதிா்ச்சியில் உள்ளனா்.