பாஜக நடத்தும் அப்பட்டமான நாடகம் தான் செங்கோட்டையனின் செயல்பாடு குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் ஷாநவாஸ் MLA பேட்டியளித்துள்ளாா்.நாகையில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஷாநவாஸ் பேட்டியளித்துள்ளாா். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எட்டு ஆண்டுகளாக அதிமுகவில் நடப்பது அனைத்தையும் முடிவு செய்வது பாஜக தான். பாஜகவின் தேவைக்காக பிரிக்கப்பட்ட அதிமுக தற்போது பாஜகவின் தேவைக்காக சேர்க்கப்பட உள்ளது. பாஜகவை பிரித்தது யார்?
சசிகலாவை ஏற்க முடியாது என ஓ பன்னீர்செல்வத்தை சொல்ல வைத்தது யார்?

ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதன் பின்னணி என்ன?
டிடிவி தினகரனை கைது செய்தது யார்?
சசிகலாவின் சொத்துக்களை முடக்கியது யார்?
எடப்பாடி வீட்டிற்கும் எடப்பாடி சம்மந்தி வீட்டிற்கும் ரைடு சென்றது யார்?
எடப்பாடியை பணிய வைத்தது யார்?
மீண்டும் பாஜக கூட்டணியில் டெல்லியில் சந்திப்பு நடத்தி அதிமுகவை சேர்த்தது யார்?
நான்கு மாதங்களாக அமைதியாக இருந்த செங்கோட்டையன் மீண்டும் பிரச்சனையை எழுப்ப காரணம் என்ன?
எடப்பாடி பாஜக சொல்வதை கேட்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. எடப்பாடி இவர்களையெல்லாம் கட்சியை விட்டு நீக்கியதே தன் கட்டுப்பாட்டில் அதிமுகவை வைத்துக் கொள்வதற்கு தான். டிடிவி தினகரன் ஓபிஎஸ் உள்ளிட்டோரை வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இது பாஜக நடத்துகின்ற அப்பட்டமான நாடகம். டெல்லியில் கூட்டம் நடந்த பிறகு டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியே வருவதாக அறிவிக்கிறார். இவை அனைத்தும் திட்டமிட்ட நாடகம் தமிழ்நாட்டு மக்கள் இவை அனைத்தையும் பார்த்து வருகிறார்கள். அதிமுக ஒன்றாக வந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது. அதிமுக கூட்டணியோடு யார் சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. இனிமேல் அதிமுக ஒன்றிணைந்தாலும் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்காது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஷாநவாஸ் பேட்டியளித்துள்ளாா்.
மாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் பகுத்தறிவை ஆரிசியர்கள் கற்றுத்தர துணை முதல்வர் வலியுறுத்தல்…