spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு8 ஆண்டுகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மோடி அரசு, விழித்தது எப்படி? - மல்லிகார்ஜுனா...

8 ஆண்டுகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மோடி அரசு, விழித்தது எப்படி? – மல்லிகார்ஜுனா கார்கே விமர்சனம்

-

- Advertisement -

பிரதமர் மோடியின் அரசின் 8 ஆண்டுகால தூக்கம், தற்போது தான் தெளிந்துள்ளதாக ஜிஎஸ்டி வரி மாற்றம் குறித்து தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே விமர்சித்துள்ளார்.8 ஆண்டுகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மோடி அரசு, விழித்தது எப்படி? -  மல்லிகார்ஜுனா கார்கே விமர்சனம்

 

we-r-hiring

மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜிஎஸ்டி வரி விகிதங்களை எளிமையாக்க 8 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் போராடியது. ஒரே நாடு, ஒரே வரி என்று சொன்ன மோடி அரசு, மாறாக 9 வகையான வரிகளை அறிமுகம் செய்தது.

ஜிஎஸ்டி வரி சிக்கல்களால் சிறு தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை படைத்ததாக பெருமையாக கூறும் ஒன்றிய அரசு, அந்த பணம் சாமானிய மக்களிடம் இருந்து மிகப்பெரிய தொகையாக வரியாக சுரண்டியதை மறக்க முடியாது. 8 ஆண்டுகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து மோடி அரசு, விழித்துக்கொண்டு ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியுள்ளது. ஜிஎஸ்டி வரி புதிய மாற்றங்கள் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,”என்று மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தியுள்ளாா்.

மக்களின் குரல் ஒலியல்ல… அது நெருப்பு… அந்த நெருப்பு பாஜகவை சாம்பலாக்காமல் விடாது – செல்வப்பெருந்தகை ஆக்ரோஷம்

 

MUST READ