காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது.காவல் நிலையங்கள், சி.பி.ஐ அலுவலகம், அமலாக்கத்துறை அலுவலகம், தேசிய புலனாய்வு அலுவலகம், டி.ஆர்.ஐ அலுவலகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி ரோகின்டன் ஃப்பாலி நரிமன் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்திறந்தது. குறிப்பாக காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்கவும் ஒலிப்பதிவு தொழில்நுட்பம் கொண்ட Night விஷன் கொண்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் உத்தரவு பிறப்பித்து இருந்தது
இந்நிலையில் இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் காவல் நிலைய மரணங்கள் தொடர்ச்சியாக நடப்பது தொடர்பாக “தைனிக் பாஸ்கர்” என்ற செய்தித்தாளில் வெளியான செய்தி அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து இன்று வழக்கை பதிவு செய்தது. அப்போது பேசிய நீதிபதிகள், உச்சநீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளுடைய அலுவலகங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியும் அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று கவலை தெரிவித்தனர்

குறிப்பாக இந்த உத்தரவுகள் செயல்படுத்த ஆணையிட்டும் காவல் நிலைய மரணங்கள் தொடர்பான விவகாரத்தில் ஒளிப்பதிவு தொடர்பான விவரங்களை கேட்கும் போது அது காணவில்லை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு என காவல்துறை தரப்பில் பல்வேறு காரணங்கள் தான் கூறப்பட்டு வருகின்றது, இது ஒரு தீவிரமான பிரச்சனையாகும். கடந்த ஏழு முதல் எட்டு மாதங்களில் சுமார் 11 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதிகள், காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு, அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் பட்டது குறித்து அதிகாரிகள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
நிவின் பாலி நடிக்கும் ‘பேபி கேர்ள்’…. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!