தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணி மீது குற்றஞ்சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் அப்படி பதிலளிக்கவில்லை என்றால் கட்சி விரோத நடவடிக்கையாக எடுத்து கொள்ளப்படும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த மாதம் 17ஆம் தேதி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சிக்கும், கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸிற்கும் எதிராக செயல்பட்டு வருவது, சட்டவிரோதமாக தன்னிச்சையாக பொதுக் குழுவை கூட்டியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை அன்புமணி மீது முன் வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்து அதற்கான அறிக்கையை மருத்துவர் ராமதாஸிடம் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்தது. இதனைத் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை குழுவால் முன் வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நோட்டீசிற்கு அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டிய காலக்கெடு கடந்த மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்ட நிலையில் அன்புமணி விளக்கம் அளிக்காததால் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களான 9 பேர் கலந்து கொண்டு நோட்டீசிற்கு விளக்கம் அளிக்காத அன்புமணி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் மருத்துவர் ராமதாஸிடம் அளித்தனர். அதனைத்தொடர்ந்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றின் மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பாமக மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று தைலாபுரத்தில் நடைபெற்றது. நிர்வாக குழு கூட்டத்தில் உறுப்பினர்களான உள்ள ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி, கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, அருள்மொழி, முரளி சங்கர், திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர். நிர்வாக குழுவில் உறுப்பினர்களாக உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட 2 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பங்கேற்காததற்கு காரணம் குறித்து அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் அன்புமணி மீது குற்றஞ்சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுக்கள் குறித்து அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீசிற்கு உரிய விளக்கம் அளிக்க தவறியதால் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை குறித்தும், அன்புமணி மீது என்ன விதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று ஆலோசிக்கப்பட்டதில் நேரிலையோ, எழுத்துபூர்வமாக அன்புமணி விளக்கமளிக்கவில்லை என்பதால் நிர்வாக குழு கூடி ஒழுங்கு நடவடிக்கை வேறு விதமாக தெரிவித்திருந்தது. அதனையும் நிர்வாக குழு ஆராய்ந்து ஒருவாரம் காலம் அவகாசம் கொடுக்கலாம் என முடிவெடுத்தது அதன் படி 10.09.2025-க்குள் அன்புமணி விளக்கமளிக்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் அதற்கு பதிலளிக்கவில்லை என்றால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். அன்புமணி மீது இரண்டாவது முறையும் பதிலளிக்கவில்லை என்றால் என்ற கேள்விக்கு போக போக தெரியும் என்ற பாடலை எத்தனை முறை தான் பாடுவது என கூறினார். மேலும் ஒரு வார கால அவகாசம் கொடுப்பது என்பது பேச்சுவார்த்தைக்கு தான் என்பதையும் ராமதாஸ் குறிப்பிட்டார். இரண்டாவது முறை அனுப்பப்படும் நோட்டீசிற்கு பதிலளிக்கவில்லை என்றால் கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கட்சியின் பொதுசெயலாளர் முரளி சங்கர் தெரிவித்தார்.
விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்று எழுதிய மாணவர்கள் சஸ்பெண்ட்!