ஆவடியில் குறும்பட கதாநாயகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆவடி அடுத்து கோவில்பதாகையை சேர்ந்தவர் அசோக்குமார் (55) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள். இதில் இளைய மகள் ரூபகலா (31) வழக்கறிஞரகவும், சினிமாவில் பின்னணி குரல் மற்றும் சின்னத்திரையில் சிறிய வேடங்களில் நடிப்பதும் குறும்படங்களில் கதா நாயகியாகவும் நடித்து வந்துள்ளார்.
சினிமா துறையில் அனைத்து பணிகளையும் செய்து வந்த ரூபகலாவிற்கு சரியான திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு வழக்கும்போல் படுக்கை அறையில் தூங்கச் சென்றார். காலை விடுந்தும் நீண்ட நேரம் அறையை விட்டு வராததால் அவரது தந்தை அசோக்குமார் படுக்கையறைக்கு சென்று பார்த்த போது மகள் ரூபகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் அளித்தாா். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரூபகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு மாதங்களாக அமைதியாக இருந்த செங்கோட்டையன் மீண்டும் பிரச்சனையை எழுப்ப காரணம் என்ன? – ஷாநவாஸ்