spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவலியை ஏற்படுத்திய 'தண்டகாரண்யம்' படம்.... பாராட்டி பதிவிட்ட சேரன்!

வலியை ஏற்படுத்திய ‘தண்டகாரண்யம்’ படம்…. பாராட்டி பதிவிட்ட சேரன்!

-

- Advertisement -

இயக்குனர் சேரன், தண்டகாரண்யம் படத்தை பாராட்டி உள்ளார்.வலியை ஏற்படுத்திய 'தண்டகாரண்யம்' படம்.... பாராட்டி பதிவிட்ட சேரன்!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் பா. ரஞ்சித் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன்ஸ், நீலம் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களின் மூலம் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தை தயாரிக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இவர், தண்டகாரண்யம் எனும் படத்தையும் தயாரித்துள்ளார். இந்த படத்தை அதியன் ஆதிரை எழுதி, இயக்கியிருக்கிறார். இதில் அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா, சபீர் கல்லாரக்கல் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைக்க பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சேரன் இப்படம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பா. ரஞ்சித், நேற்று ‘தண்டகாரண்யம்’ படம் பார்த்தேன். அதிகாரம் எங்கெல்லாம் எப்படி எல்லாம் எளியவர்கள் வாழ்வில் ஊடுருவி நம்மை முன்னேறவிடாமல் அடிமைகள் ஆக்குகிறது என்பதை சொல்லும் ஆகச்சிறந்த படைப்பு. தோழர் அதியன் ஆதிரையின் திரைக்கதையும், உருவாக்கமும் அவரை தமிழில் மிகச் சிறந்த இயக்குனராக்குகிறது.

we-r-hiring

அப்படி ஒரு இயக்குனரை அடையாளம் கண்டதற்கும், அவருடைய சிந்தனைகளை படமாக்கும் வாய்ப்பை தொடர்ந்து உருவாக்கி தருவதற்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டு மணி நேரம் படம் ஏற்படுத்திய வலியை கடக்கவே இரண்டு வாரங்களாகும் போல. சிந்திப்போம் சிவப்பு வர்ணம் மட்டுமல்ல என்பதை” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ‘தண்டகாரண்யம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

MUST READ