spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு“ஒத்த ஆளா தமிழர்களின் மொத்த குரலாய்” பேரறிஞர் அண்ணா!! - ராஜீவ் காந்தி புகழாரம்

“ஒத்த ஆளா தமிழர்களின் மொத்த குரலாய்” பேரறிஞர் அண்ணா!! – ராஜீவ் காந்தி புகழாரம்

-

- Advertisement -

மாநில உரிமைகளின்  எழுதப்படாத இந்திய அரசியல் அமைப்பு சட்ட முறையின் தந்தை பேரறிஞர் அண்ணா என தி மு கவின் மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளாா்.“ஒத்த ஆளா தமிழர்களின் மொத்த குரலாய்”- பேரறிஞர் அண்ணா!!மேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”1961 செப்டம்பர் 2 ஆம் தேதி இந்திய தேசிய கவுன்சில் ஒன்றுகூடி ஒரு அறிக்கையை தயாரித்தது. அந்த அறிக்கையினை 1962 நவம்பர் 5-ம் தேதி இந்தியாவின் பாராளுமன்றம் ஏற்று இந்திய-சீன போரை காரணம் காட்டி “இனிமேல் இந்தியாவிற்குள் யாரும் தனிநாடு கேட்கக்கூடாது”என்று சொல்லி இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டம் சரத்து-19(2)ல் திருத்தம் செய்து  Anti-secession Bill 1963 என்கிற சட்ட முன் வரைவு ஒன்று பேச்சுரிமை,எழுத்துரிமை என்கிற அடிப்படை உரிமை  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருக்க கூடாது (This sovereignty and  intearity of india) என்று இந்தியாவின் 16-வது அரசியலமைப்புச்சட்ட திருத்தத்தை இந்தியாவின் பாராளுமன்றத்திற்குள் கொண்டு வந்து வாக்கெடுப்புக்கு பாராளுமன்றம் தயாரானது.

1963 மே-2 ல் மக்களைவையின் 293 மொத்த உறுப்பினர்களும் ஆதரித்து. 1963 மே-9 ஆம் தேதி மாநிலங்கள் அவைக்கு சட்ட திருத்தம் வந்த போது அவையின் 136 மொத்த உறுப்பினர்களில் 135 பேர் அச்சட்ட திருத்தத்தினை ஆதரித்தாலும் பேரறிஞர் அண்ணா மட்டும் “ஒத்த ஆளா தமிழர்களின் மொத்த குரலாய்”எழுந்து நின்று இந்த திருத்தத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது நான் இதை முழுவதுமாக எதிர்க்கிறேன்.  இது எங்களின் அரசியல் உரிமைக்கு எதிரானது “நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகிறோம்”

we-r-hiring

“வீடு இருந்தால்தான் ஓடு மாட்ட முடியும், நாடு இருந்தால்தான் கட்சி நடத்த முடியும்” என்றும் “தனி திராவிட நாடுக்கான காரணங்கள் அப்படியே இருக்கிறது கோரிக்கையை மட்டும் நாங்கள் தற்போது நிறுத்தி கொள்கிறோம் என்று சொல்லி நான் இச்சட்ட திருத்ததை எதிர்த்து வாக்களிக்கிறேன் என்று வாக்களித்தார். இந்தியாவின் பாராளுமன்றத்திற்குள் “அண்ணா”என்கிற திராவிட இனத்தின் தமிழர்களின் அரசியல் முகமாய், அடையாளமாய் இருந்த தலைவன் பேசி ஆண்டுகள் பல கடந்துவிட்டது. ஆனால் அரசியல் உரிமை, மாநில சுயாட்சி என தற்போது ஒன்றிய அரசினை எதிர்த்து அரசியல் ரீதியாக களமாட வேண்டிய தேவை இன்னும் அதிகமாகவே உள்ளது. மாநில உரிமைகளின்  எழுதப்படாத இந்திய அரசியல் அமைப்பு சட்ட முறையின் தந்தை பேரறிஞர் அண்ணா!!
அண்ணா வழி நடப்போம்!!
அண்ணா புகழ் ஓங்கட்டும்!!!
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்!! என தி மு கவின் மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளாா்.

ரஜினியை வைத்து விஜய்க்கு செக் வைத்த ஸ்டாலின்! எதிர்பாராத திருப்பம்! திணறும் விஜய்!

MUST READ