spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷின் அடுத்த படத்தை நான் இயக்கலாம்... ஆனால் அது.... மேடையில் பிரபல இயக்குனர்!

தனுஷின் அடுத்த படத்தை நான் இயக்கலாம்… ஆனால் அது…. மேடையில் பிரபல இயக்குனர்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டிருப்பவர் தனுஷ். இவர், கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். தனுஷின் அடுத்த படத்தை நான் இயக்கலாம்... ஆனால் அது.... மேடையில் பிரபல இயக்குனர்!இவர் தற்போது ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிர இளையராஜாவின் பயோபிக், அப்துல் கலாமின் பயோபிக் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 14) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கலந்து கொண்டார்.தனுஷின் அடுத்த படத்தை நான் இயக்கலாம்... ஆனால் அது.... மேடையில் பிரபல இயக்குனர்! அப்போது மேடையில் பேசிய அவர், “எனது அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு லொகேஷன் பார்க்க வந்தேன். தனுஷ் சாரின் அடுத்த படத்தை நான் கூட இயக்கலாம். அதை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம். ஆனால் இது எல்லாம் வதந்தியாகவும் இருக்கலாம்” என்று கலகலப்பாக பேசினார்.

கடந்தாண்டு ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே தமிழரசன் பச்சமுத்து, தனுஷுடன் இணைய இருக்கும் தகவல் ஏற்கனவே இணையத்தில் உலா வந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

MUST READ