இந்திய அரசு ஆன்லைன் மற்றும் பெட்டிங் கேம்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறுவோர்க்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மற்றும் பெட்டிங் கேம்களுக்கு மத்திய அரசு முழுமையான தடை விதித்துள்ளது. 2025 அக்டோபர் 1 முதல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன. நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அக்டோபர் 1 முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன” என்றும் அறிவித்துள்ளாா்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தினால், ஊக்குவித்தால் அல்லது பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை ₹50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அரசின் புள்ளிவிரப்படி, 50 மில்லியன் மக்கள் ஆன்லைன் பேட்டிங்கால் ரூ.20,000 கோடி இழந்துள்ளனர். இதனால் கடன் சுமை, குடும்ப பிரச்சினைகள் அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

“இனி யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது. சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனையை தவிர்க்க முடியாது” என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ஒரே ஒரு கர்சீப் வீடியோ! சம்பவம் செய்த ஸ்டாலின்! கடுப்பில் கதறிய எடப்பாடி!