அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பேச வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் மீது தமிழக காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்வது அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். இதே போல், வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல், கொலை சம்பவங்கள் அதிகமாகி தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக தெரிவித்தார்.
தமிழக அரசு தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் குறித்து மக்களிடையே பேச வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.



