spot_imgspot_img
HomeBreaking Newsநவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு!!

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு!!

-

- Advertisement -

நவராத்திரி பண்டிகை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிக தேவை மற்றும் போதிய விநியோகம் இல்லாததால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு!!நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மழை காரணமாக பூக்களின் சாகுபடி குறைந்து, சந்தைக்கு வரும் பூக்களின் அளவு குறைவதால் தேவைக்கு ஏற்ப விநியோகம் இல்லை. பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. பொதுவாக புரட்டாசி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகம் இருப்பதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வாடாமல்லி, கேந்தி, செவ்வந்தி, தாமரை, அரளி, தாழம்பூ என அனைத்து வகை பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட அரளி பூ ரூ.160 ஆகவும், ரூ.50க்கு விற்கப்பட்ட வாடாமல்லி ரூ.80க்கும் விற்பனையாகிறது. ரூ.30க்கு விற்கப்பட்ட சிவப்பு கேந்தி ரூ.60ஆகவும், ரூ.70க்கு விற்ற சம்பங்கி ரூ.100ஆகவும் விலை உயர்ந்துள்ளது. ரூ.100க்கு விற்ற பட்டன் ரோஸ் ரூ.180க்கும், துளசி ரூ.20ல் இருந்து ரூ.30ஆகவும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.400ல் இருந்து ரூ.600, மல்லிகை ரூ.500ல் இருந்து ரூ.800 ஆகவும் விலை உயர்ந்து விற்கப்படுகிறது. நவராத்திரியின் போது,  பூக்களின் தேவை மேலும் அதிகரிப்பதால் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தினகரனை சந்தித்த அண்ணாமலை! ஆட்டம் தொடங்கிடுச்சு! ரகசியம் உடைக்கும் உமாபதி!

MUST READ