spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாசாவின் கண்ணீர்!

காசாவின் கண்ணீர்!

-

- Advertisement -

சுப வீரபாண்டியன்

காசாவின் கண்ணீர்!உலகத்திலேயே மிகவும் கெட்டவர்கள் யார் தெரியுமா? – கெட்டவைகள் நடக்கும் போது அவற்றை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்கள்தான்!

இப்போது 700 நாள்களைக் கடந்து காசாவில் நடந்து கொண்டிருக்கும் பேரழிவுகளைப் பார்த்தும் பார்க்காமலும் இருக்கும் நாடுகளும், மனிதர்களும்தான், உலகிலேயே மிக மிகக் கெட்டவர்கள் என்று சொல்ல வேண்டும்!

we-r-hiring

ஊடகங்களுக்கு எல்லாம் தடை விதித்த பின்னும், அல்ஜசிரா தொடங்கி பல்வேறு ஊடகங்கள் வெளிப்படுத்தும் காட்சிகள் நம் நெஞ்சைப் பிழிகின்றன!

ரத்தக் காயங்களோடு பாலைவனத்தில் படுத்திருக்கும் அந்தக் குழந்தையை, தன் தங்கையை தோளில் வைத்துக் கொண்டு மணலில் கால் பதித்து உயிர் பிழைக்க ஓடும் அந்தச் சிறுவனை, இடிபாடுகளுக்கு உள்ளான கட்டிடத் திற்கு உள்ளேயிருந்து ஒரு சின்னப் பொம்மையோடு வெளியில் ஓடிவரும் இன்னொரு பொம்மை போன்ற குழந்தையை இவற்றையெல்லாம் எப்படிச் சாதாரண காட்சிகளாய் நினைத்துப் புறந்தள்ளிவிட முடியும்?காசாவின் கண்ணீர்!1917 ஆம் ஆண்டு, முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், எங்களுக்கு உதவி செய்தால், யூதர்கள் தங்களுக்கென்று புதிய நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்ள நாங்கள் துணையிருப்போம் என்று, பிரிட்டனின் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆர்தர் பல்போர் கொடுத்த உறுதி மொழியின் (Balfour declaration) அடிப்படையில்தான், 1948இல் இஸ்ரேல் உருவானது!

இப்போது தாங்கள் ஆக்கிரமித்துக் கொண்ட மண்ணைத் தங்கள் சொந்த நாடு என்று அறிவித்து, அந்த மண் ணின் மைந்தர்களை அடியோடு அழிப்பதற்கு இஸ்ரேல் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது! காசா துண்டு நிலம் முழுவதும், ரத்தக்கரைகளில் நனைந்திருக்கிறது!காசாவின் கண்ணீர்!

இதற்கு நேரடியாகத் துணை போகும் அமெரிக்கா, ஐ.நா. அவையில் இந்தச் சிக்கல் எழுப்பப்படும் போதெல்லாம், தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அழுகுரல், உலகத்தின் காதுகளில் விழாமல் தடுத்து விடுகிறது!

இதனால் இஸ்ரேலும், அமெரிக்காவும் மட்டும்தான் குற்றவாளிகள் என்று கருதிவிடக்கூடாது. இத்தனை கொடுமைகளையும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அனைத்து நாடுகளும் குற்றவாளிகள்தான்!

கரூர் துயர சம்பவம் – புதிய விசாரணை அதிகாரி நியமனம்

MUST READ