சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்த வாடிக்கையாளரின் குழந்தையின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகையை பறித்து கொண்டு மாயமான மூதாட்டியை புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் காவல்துறை கைது செய்து நகையை மீட்டனர்.சென்னை தம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த குமார் கிண்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் இவர் நேற்று தனது மனைவி சௌமியா மற்றும் இரண்டரை வயது மகள் அனன்யாவுடன் பாடி சரவணா ஸ்டோருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டிஅங்குள்ள பெண் குழந்தையான அனன்யாவை கொஞ்சியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் குழந்தை அழுதுள்ளது. பின்னர் குழந்தையை தூக்கி பார்த்த போது கழுத்தில் அணிந்து இருந்த 2 சவரன் தங்க நகை மாயமாகி இருந்தது. இதனை அடுத்து இதனால் பதறிப்போன குழந்தையின் பெற்றோர் அந்த பெண்மணியை தேடிய போது அவர் அங்கிருந்து மாயமாகி இருந்தார்.
இதனை அடுத்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கடையில் இருந்த கண்கானிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது அதில் மாஸ்க் அணிந்த மூதாட்டி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. உடனடியாக திருட்டில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்த காவல்துறையினர் விசாரணையில் அவர் திருவெற்றியூரைச் சேர்ந்த ஜெயந்தி(60) என்பதும் அவர் மீது இதேபோல் பல்வேறு திருட்டு வழக்கு உள்ளதும் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் குழந்தைகள், பெண்களை திசை திருப்பி திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தங்க நகையை மீட்டதோடு மூதாட்டியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்…சவரன் ரூ.87,000 நெறுங்கியது…
