(செப்டம்பர் 30) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில்ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சமாக ரூ.87,000ஐ நெருங்கி உள்ளது நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம், சுபகாரியங்கள் வைத்திருக்கும் குடும்பங்களை விழிபிதுங்க செய்துள்ளது இந்த விலை ஏற்றம். ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,860க்கும், சவரன் ரூ.720 உயர்ந்து 1 சரவன் ரூ.86,880க்கு விற்பனையாகிறது. கடந்த 9 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,560 அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அதே போன்று தங்கத்திற்கு நிகராக வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து, சாமானிய நடுத்தர மக்கள் வெள்ளி நகையை வாங்க முடியாமல் புலம்பி வருகின்றனர். சில்லறை வர்த்தகத்தில் இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.161-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேற லெவல் காம்போ…. ‘சூர்யா 48’ படத்தின் இயக்குனர் இவர்தானா?…. எகிறும் எதிர்பார்ப்பு!
