spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகரூர் உயிரிழப்புக்கு முன்பே அண்ணாமலை கருத்து தெரிவித்தது எப்படி? – தொல்.திருமாளவன் கேள்வி

கரூர் உயிரிழப்புக்கு முன்பே அண்ணாமலை கருத்து தெரிவித்தது எப்படி? – தொல்.திருமாளவன் கேள்வி

-

- Advertisement -

கரூர் விஜய் பிரச்சார உயிரிழப்பு சம்பவத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று தெரிவதற்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்டோர் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்து தெரிவித்தார்கள்.கரூர் உயிரிழப்புக்கு முன்பே அண்ணாமலை கருத்து தெரிவித்தது எப்படி? – தொல்.திருமாளவன் கேள்விநீதித்துறையை அரசுக்கு எதிராக அணுகும் முயற்சியை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மேற்கொண்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது. நீதித்துறை இதனை நிதானமாக கையாளுவோம் என கூறி இருக்கிறது. இது சரி என்று கருதப்பட வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.

சென்னை விமான நிலையத்தில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”கரூர் விவாகரத்தில் அரசு ஏற்கெனவே சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. புலன் விசாரணைக்கு பிறகு வேறு யார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென காவல்துறை முடிவு செய்வார்கள். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் அறிக்கை கொடுத்த பிறகு அரசு அது குறித்து முடிவு செய்யும் என நம்புகிறேன். தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய் பெயர் இதுவரை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது அவரை கைது செய்ய வேண்டும் என கூறுவது அர்த்தம் இல்லை. அவருக்கு இதில் வேறு விதத்தில் தொடர்பு இருக்கிறது என அரசு கருதியினால் சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

we-r-hiring

தமிழகத்தில் நடைபெறும் எல்லா சம்பவங்களையும் வைத்து ஒரு சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். திமுக ஆட்சியில் இருப்பதால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது என பொதுவாக சொல்ல முடியாத அளவிற்கு திட்டமிட்டு திமுகவிற்கும் திமுக அரசுக்கு எதிராகவும் எதிராக வெறுப்பை சிலர் பரப்பி வருகின்றனர். ஆறுதல் சொல்ல வருவதற்கு அனைவருக்கும் பொறுப்பு கடமை இருக்கிறது. அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வந்தது மகிழ்ச்சி, உள் நோக்கத்தோடு செயல்படுகிறது என்ற விமர்சனமும் இருக்கத்தான் செய்கிறது. விசாரணை தொடங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று தெரிவதற்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்டோர் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்து தெரிவித்தார்கள்.

தமிழ்நாடு அரசு உடனடியாக இதில் தலையீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை தொடங்கியுள்ளது, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து அந்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதித்துறையை அரசுக்கு எதிராக அனுக முயற்சியை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மேற்கொண்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது, நீதித்துறை இதனை நிதானமாக கையாளுவோம் என கூறி இருக்கிறது இது சரி என்று கருதப்பட வேண்டும்“ என்று திருமாவளவன் கூறியுள்ளாா்.

”த.வெ.கா நிர்வாகிகளுக்கு மனிதாபிமானம் இல்லை”- எம்.பி.கனிமொழி சாடல்

MUST READ