அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில புலமையில் கலக்கும் கூலித் தொழிலாளி மகன்.
சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் இவரது மகன் ஹரி சங்கர் போரூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். காலையில் பள்ளிக்கு வரும் மாணவன் தினமும் காலை நடக்கும் நிகழ்வுகளை ஆசிரியர் சொல்லித்தந்த சொற்களை வைத்து பேசி வந்துள்ளார். தற்போது ஒவ்வொரு நாளும் கற்ற சொற்களை மொத்தமாக எட்டு நிமிடத்தில் 500 சொற்கள் அதற்கான ஒத்த சொற்களையும் கூறி அசத்தியுள்ளார். இதனை பள்ளியின் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ஆசிரியர் அதிகாரிகள் முன்பு பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து சிறப்பு விருந்தினராக வந்த எம்.எல்.ஏ மாணவனுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

வார்டு கவுன்சிலர் சாந்தி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரவாயல் எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி மண்டல தலைவர் நொளம்பூர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 கோடி ரூபாய் நிதி முறைகேடு!!


