spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

-

- Advertisement -

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என அஇஅதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமிமேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என அஇஅதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

விஜயை விமர்சித்த பிரபல நடிகை…. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…. அசராமல் நடிகை செய்த செயல்!

MUST READ