spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎண்ணூர் BHEL விபத்து…உயிரிழந்த 9 பேரின் உடலை நேரில் பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கர்…

எண்ணூர் BHEL விபத்து…உயிரிழந்த 9 பேரின் உடலை நேரில் பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கர்…

-

- Advertisement -

எண்ணூரில் BHEL நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்களை நேரில் பார்வையிட்டு சிகிச்சை பெற்று வருபவரை நலம் விசாரித்த அமைச்சர் சிவசங்கர்.எண்ணூர் BHEL விபத்து…உயிரிழந்த 9 பேரின் உடலை நேரில் பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கர்…

பொன்னேரி அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் BHEL நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல் ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்களைப் பார்வையிட்டு சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது தமிழ்நாடு மின்வாரியத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், “எண்ணூர் BHEL  நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த விபத்து வேதனை அளிக்கிறது என்று கூறிய அமைச்சர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த சேமிப்பு கிடங்கு கூரையுடன் கூடிய சேமிப்பு கிடங்காக அமைக்கப்படுகிறது, கூரை அமைக்கும் பொழுது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தனர் என்றும் உடனடியாக முதலமைச்சர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவர் அனல் மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் விமான மூலம் உடல்களை எடுத்து செல்வதற்கான பணிகளை BHEL நிறுவனம் செய்துள்ளது என்றார்.

பிரபாஸ் படத்தால் விஜய்க்கு வந்த சிக்கல்…. அடிமேல் அடி வாங்கப் போகிறதா ‘ஜனநாயகன்’?

MUST READ