பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் நடந்த பேட்டியில் இரண்டு முறை டியூட் படத்தை நிராகரித்துவிட்டதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவருடைய நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பிரதீப், டியூட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கீர்த்திஸ்வரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. சாய் அபியங்கர் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதன்படி படப்பிடிப்புகளும் நிறைவடைந்து ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், கிட்டத்தட்ட இரண்டு முறை இந்த படத்தை நிராகரித்து விட்டதாக கூறியுள்ளார்.
அதன்படி அவர், “டியூட் படத்தின் ஸ்ரிப்ட்டை இரண்டு தடவை ரிஜெக்ட் செய்துவிட்டேன். ஏனென்றால் கதையின் மையக்கரு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மக்கள் இதை நல்லா எடுத்துக்குவாங்களா இல்லை என்னை காமெடி பீஸ் ஆக்கிவிடுவாங்களான்னு தோணுச்சு. அதன் பிறகு மைத்ரி நிறுவனம் இயக்குனருடன் வந்து, லவ் டுடே பார்த்த பிறகு ஸ்கிரிப்ட்டை மாற்றியதாக கூறியது. அதன் பிறகு இந்த ஸ்கிரிப்ட் மாஸ் மாதிரி இருந்தது. நான் கவலைப்பட்ட அந்தப் பகுதி தான் சிறந்த பகுதியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -


