பிரபல நடிகையின் AI ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதைத் தொடர்ந்து இவர் டான், கேப்டன் மில்லர், பிரதர் என பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். தற்போது இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘They call him ஓஜி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் தமிழில் கவின் நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் பிரியங்கா மோகன். இவ்வாறு பிஸியான நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகனின் AI ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து பிரியங்கா மோகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “என்னை தவறாக சித்தரிக்கும் வகையில் சில AI புகைப்படங்கள் பரவத் தொடங்கியுள்ளன. இந்த பொய்யான புகைப்படங்களை பகிர்வதையும் அல்லது பரப்புவதையும் நிறுத்துங்கள். AI என்பதை நாம் நல்ல படைப்பாற்றலை உருவாக்க பயன்படுத்த வேண்டும். நாம் எதை உருவாக்குகிறோம் எதை பகிர்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.