spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு 27-ம் தேதி ஒத்திவைப்பு…

வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு 27-ம் தேதி ஒத்திவைப்பு…

-

- Advertisement -

நீதித்துறை அதிகாரிகள், நீதித்துறை அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு கிடைக்கும் வகையில் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விரிவான விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு 27-ம் தேதி ஒத்திவைப்பு…நீதித்துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கு நீதித்துறையில் உரிய பதவி உயர்வு கிடைப்பதில்லை என்ற குறைபாடு உள்ளது. எனவே அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் வகையில் உரிய பொதுவான வழிகாட்டு நெறிமுறையை வகுக்ககோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், வினோத் சந்திரன், ஜாய்மாலா பக்சி ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரத்தில் அனைத்து உயர் நீதிமன்றங்களும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் சில தரவுகளை உச்சநீதிமன்றத்தில் வழங்க வேண்டும். குறிப்பாக கீழமை நீதிமன்றத்திலிருந்து எத்தனை பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் வழக்கறிஞர்களாக இருந்துவிட்டு நேரடியாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

we-r-hiring

மேலும் இந்த வழக்கில் முக்கியமாக இருக்கக்கூடிய கேள்விகள் மற்றும் சாராம்சங்களை முறைப்படுத்துமாறு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடையிட்டு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் ஒவ்வொரு விதிகள் வகுக்கப்பட்டு இருக்கும், அது அத்தனைக்குள்ளும் தனித்தனியாக பார்த்து ஆய்வு செய்ய  விரும்பவில்லை. மாறாக பொதுவான ஒரு வழிகாட்டு நெறிமுறையை இந்த நீதிமன்றம் வகுக்கும்.

குறிப்பாக, நீதித்துறை அலுவலர்களின் பதவி உயர்வுக்கான பணிமூப்பு தொடர்பாகவும், உயர் நீதித்துறையின் பணி மூப்பு தன்மையை தீர்மானிக்கும் காரணி என்ன ?  என்ற அந்த முக்கிய கேள்விக்கு விடை கண்டு உரிய வழிமுறைகள் வகுக்கப்படும் அதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விரிவான விசாரணையை அக்டோபர் 27-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு வழங்கியுள்ளது.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..!! சுற்றுலா பயணிகளுக்கு தடை

MUST READ