இன்றைய (அக்.29) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னை: கடந்த சில நாட்களாக மளமளவென குறைந்த தங்கம் இன்று திடீரென சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.135 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,210க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து 1 சவரன் ரூ.89,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றம் என்பது நேரடியாகவே சாமானிய மக்களை பாதிக்கின்றன. அந்த வகையில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து மக்களை கலங்கடித்த தங்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. தொடர்ந்து தங்கத்தின் விலை இறங்கும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இத்தகைய சூழலில் இன்று தங்கம் மீண்டும் உயர்ந்துள்ளது மக்களிடையே சிறு கலக்கத்தை உருவாக்கியுள்ளது.

தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்வை கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 1 கிராம் ரூ.166க்கும், கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து 1 கிலோ ரூ.1,66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.


