சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் அரசின் வளர்ச்சி மற்றும் பசுமை திட்டங்களை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக, ரேஸ் கிளப் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பின் கோல்ப் மைதானப் பகுதியில் பசுமை பூங்கா மற்றும் நீர்நிலைகள் அமைக்கும் பணிகளை தொடர அரசு அனுமதி பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரேஸ் கிளப் நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்ததுள்ளது. மேலும், “தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வை அணுகி மனுதாரர் முறையீடு செய்யலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், கிண்டி ரேஸ் கிளப்பில் அரசு மேற்கொண்டு வரும் பசுமை பூங்கா மற்றும் நீர்நிலைகள் அமைக்கும் பணிகள் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


