பீகாரை விட தமிழக அரசு தங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறது என வட மாநிலத்தவர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
பீகார் தொழிலாளர்களை தமிழகத்தில் துன்புறுத்துவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தமிழகத்தில் வசித்து வரும் வட மாநிலத்தவர்கள் அதற்கு நேரடி பதிலாக “தமிழகம் தான் எங்களுக்கு பாதுகாப்பு” எனத் தெரிவித்துள்ளனர்.

சென்னை மணலி சடையங்குப்பம் பகுதியில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர். பீகார் மாநிலத்தை விட தமிழகத்தில் தான் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என மனம் திறந்து பகிர்ந்துள்ளனர்.
தமிழக அரசு தங்களை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். மழைக்காலங்களில் முகாமில் தங்க வைத்து மூன்று வேலையும் வயிறார உணவு தருகின்றனர். மேலும் 25 வருடங்களாக இங்கே தங்கியிருக்கிறோம். எங்களது பிள்ளைகள் ஆர்.கே.நகர் அரசு கல்லூரியில் படிக்கிறார்கள். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுரிமை எல்லாம் எங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த முறை தேர்தலில் நாங்கள் எங்கள் ஓட்டை மு.க.ஸ்டாலின் அவர்களுக்கே போடப்போகிறோம், என்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழகத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தவர்கள் தமிழகம் தான் எங்களுக்கு பாதுகாப்பு என்று கூறுவது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு ஆபத்தா? கலவரத்தை தூண்டும் மோடி! ஜீவசகாப்தன் நேர்காணல்!


