spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வீடு வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி... அதிரடியாய் களத்தில் இறங்கிய மக்கள்... தொக்காக சிக்கிய...

வீடு வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி… அதிரடியாய் களத்தில் இறங்கிய மக்கள்… தொக்காக சிக்கிய நபர்… .

-

- Advertisement -

அரசு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கி தருவதாக குமரி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 90 பேரிடம் சுமார் 70 லட்சம் மோசடி செய்த நபரை பிடித்து பாதிக்கப்பட்ட மக்கள் காவல் துறையிடம்  ஒப்படைத்தனா்.வீடு வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி… அதிரடியாய் களத்தில் இறங்கிய மக்கள்… தொக்காக சிக்கிய நபர்…குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியில் அரசு தொகுப்பு வீடுகளில் வீடுகள் வாங்கி தருவதாக கூறி குமரி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 90 நபர்களிடம் சுமார் 70 லட்சம் ரூபாய் வாங்கி நூதன முறையில் மோசடியில் ஈடுப்பட்ட நபரை ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில் மோசடியில் ஈடுப்பட்டவர் மற்றொருவரிடம் மோசடி  பணத்தில் ஒரு பகுதியை கொடுத்து ஏமாந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மோசடி செய்த நபரிடமே மோசடி செய்த ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த மற்றொரு நபரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியில் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன் பெறுவதற்காக அரசு சார்பாக 288  தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு  தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த தொகுப்பு வீடுகளில் வீடுகள் வாங்கி தருவதாக கூறி குமாரபுரம் பகுதியை சேர்ந்த அருணன் (65) என்பவர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி குமாரபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 90 குடும்பத்தினரிடம் தலா 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வாங்கியுள்ளார். ஆனால் அவர்களுக்கு கூறியபடி வீடுகள் வாங்கி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.வீடு வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி… அதிரடியாய் களத்தில் இறங்கிய மக்கள்… தொக்காக சிக்கிய நபர்…இது குறித்து பணம் கொடுத்தவர்கள் அருணனை தொடர்பு கொண்டு நேரடியாக சந்தித்து கேட்டதற்கு, முறையான பதில் கூறாமல் இருந்துள்ளார். இதனையடுத்து பணம் கொடுத்த நபர்கள் தங்களுக்கு  வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா? என விசாரித்த பொழுது அவ்வாறு யாருக்கும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்பது தெரிய வந்ததை தொடர்ந்து தாங்கள் பணத்தை கொடுத்து ஏமாந்து உள்ளதும் தங்களை அருணன் மோசடி செய்ததும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். இதனை அடுத்து தாங்கள் கொடுத்த பணத்தை அருணனிடம் கேட்ட பொழுது அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து அவரது வீட்டிற்கு சென்ற பாதிக்கப்பட்ட அவரை பிடித்து வைத்து பின்னர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள்.

we-r-hiring

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரை பிடித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரனையில் அருணன் பொதுமக்களை மோசடி செய்து  வாங்கிய பணத்தில் ஒரு பகுதியை ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்ததாகவும், அவர் அருணனை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தலைமறைவான அந்த நபரை ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸார் தேடி வருகிறார்கள். அரசின் தொகுப்பு வீடுகள் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுடுப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப்போல் கடந்த வருடம் பால்குளம் பகுதியிலும் தொகுப்பு வீடுகள் வாங்கி தருவதாக கூறி அப்பாவி ஏழை மக்களை ஒரு கும்பல் ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது.

6 கோடி வாக்குரிமையும் காலி! SIRக்கு பின்னால் உள்ள சதி! சுப்ரீம் கோர்ட் சொல்லப்போவது என்ன? வாஞ்சிநாதன் நேர்காணல்!

MUST READ