spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவு – உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்!

பீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவு – உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்!

-

- Advertisement -

பீகாரில் உள்ள 243 தொகுதிகளில், முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள், ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.பீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவு – உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்!

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6) காலை 7 மணிக்குத் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்காளர்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக உரிமையைச் செலுத்தினர்.

we-r-hiring

முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பாட்னா, பக்தியார்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு உற்சாகமான சூழலில் நடைபெற்று வருகிறது.

மாநில முதல்வர் நிதிஷ் குமார் பக்தியார்பூரில் தனது வாக்கை பதிவு செய்தார். அதேபோல் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவும் பாட்னாவில் வாக்களித்தார்.

வாக்குப்பதிவின் ஆரம்ப நிலவரப்படி, காலை 9 மணிக்கு 13.13% வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணிக்குள் அது 27.65% ஆக உயர்ந்தது. அதன் பின், பகல் 1 மணி நிலவரப்படி மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 40% என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட வாரியாகப் பார்க்கும் போது, பெகுசராய் மாவட்டம் 30.37% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. லக்கிசராய் (30.32%), கோபால் கஞ்ச் (30.04%), முங்கெர் (29.68%), சஹார்சா (29.68%), முசாபர்பூர் (29.66%) ஆகிய மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பாட்னா மாவட்டத்தில் 23.71% வாக்குகள் பதிவாகியுள்ளன. பக்ஸர் (28.02%), போஜ்பூர் (26.76%), தர்பங்கா (26.07%), காகாரியா (28.96%), மாதேபுரா (28.46%), நாளந்தா (26.86%), சமஸ்திபூர் (27.92%), சரண் (28.52%), ஷேக்புரா (26.04%), சிவான் (27.09%), வைஷாலி (28.67%) ஆகிய மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு சீராக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து வாக்காளர் வருகை அதிகரித்து வருவதால், மாலை நேரத்தில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் மேலும் உயரும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆவடி அருகே மின்சார ரயில் மோதி வாலிபர் பலி!!

MUST READ