தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் இயங்கும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரம் பகுதியில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த அஞ்சினா ரத்னா அபினவ் என்கிற மாணவர் ஆய்வக தேர்விற்கு செல்போன் எடுத்துச் சென்றதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவரை தேர்வில் இருந்து வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த மாணவர் அபிநவ் கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட மாணவன் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாணவரின் தற்கொலை முயற்சி சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து தஞ்சாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடல் நீரை மேக கூட்டங்கள் உறிஞ்சும் அரிய நிகழ்வு!…ஆச்சரியத்தில் மக்கள்!


