spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்விரதம் இருந்தால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?

விரதம் இருந்தால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?

-

- Advertisement -

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்.விரதம் இருந்தால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?

விரதம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியான ஒரு பழமையான நடைமுறையாகும். விரதம் இருப்பதால் பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

அந்த வகையில் விரதம் இருப்பதால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவை இயல்பாகவே குறைய தொடங்கும். குறிப்பாக நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு இது நல்ல பலன் தரும்.விரதம் இருந்தால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?

விரதம் இருப்பதால் உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்புகள் எரிக்கப்படுகின்றன. இதனால் கெட்ட கொழுப்புகள் குறைந்து நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும்.

அடுத்தது தினமும் சாப்பாடு இடைவெளி இல்லாமல் இருப்பதால் ஜீரணக் கோளாறு ஏற்படுகிறது. விரதம் இருப்பதால் நம் உறுப்புகளுக்கு சிறிது ஓய்வு கிடைக்கும். ஜீரணமும் சீராக நடைபெறும்.

விரதத்தின் போது உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் தோல் பிரச்சினைகள், வீக்கம், சோர்வு போன்றவை குறையும்.விரதம் இருந்தால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?

விரதம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்து இருக்கலாம். அதாவது விரதத்தின் போது தேவையற்ற உணவுகளின் விருப்பம் குறையும். விரதத்தின் போது உடலானது சேதமடைந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும். இது புற்றுநோய் மற்றும் வயது சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.விரதம் இருந்தால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?

விரதம் இருப்பதால் மன அமைதி கிடைக்கும். அதாவது மன அழுத்தம் குறைந்து மன வலிமை பெருகும். இது தவிர கருணை, நன்றி உணர்வு, தியானத்தில் கவனம், உணர்வுகளை கட்டுப்படுத்துதல் போன்ற ஆன்மீக ரீதியிலான நன்மைகளும் கிடைக்கின்றன.

இருப்பினும் உடல் ரீதியான சில பிரச்சனைகள் இருப்பவர்கள் விரதம் இருப்பதற்கு முன்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ