இளம் வயதிலேயே ஞாபக மறதியா? உங்கள் மூளையை சூப்பர் மூளையாக மாற்ற இந்த 6 பழக்கங்களே காரணம் அமைகின்றன.
இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே நினைவாற்றல் குறைவது என்பது சா்வசாதாரணமாகிவிட்டது. இது தற்போது பெருகிவரும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இதனை சமாளிப்பது பெரும் சவாலாகவே உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, இதற்கு முக்கிய காரணம் நம்முடைய சில பழக்கங்களே. தொலைபேசி எண்கள் அல்லது வழிகளை மனப்பாடம் செய்வதில்லை. தொழில்நுட்பத்தை அதிகம் நம்பி இருக்கின்றோம். இதனால் மூளையின் நினைவாற்றல் செல்களை பலவீனப்படுத்துகின்றன.
மேலும், தவறான உணவுமுறை, உடல் உழைப்பின்மை, அதிக மன அழுத்தம், ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது மற்றும் தூக்கமின்மை ஆகியவை நினைவாற்றலைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நினைவாற்றலை அதிகரிக்க சில சிறப்பு உணவுகள் அவசியம். விஞ்ஞானிகள், ஒமேகா-3 டிஹெச்ஏ (எண்ணெய் மீன்கள்), ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (பழங்கள் மற்றும் காய்கறிகள்) மற்றும் ரெஸ்வெராட்ரோல் (டார்க் சாக்லேட்) போன்றவற்றை பரிந்துரைக்கின்றனர். இதனுடன், தினசரி யோகா, தியானம் செய்ய வேண்டும். தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. நன்றாக தூங்க வேண்டும். தினமும் ஏழு மணி நேரமாவது தூங்க வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் சுறுசுறுப்பான உடற்பயிற்சி செய்வது மூளை செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
- Advertisement -


