spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் பயன் தரும் ஸ்ப்ரிங் ஆனியன்!

சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் பயன் தரும் ஸ்ப்ரிங் ஆனியன்!

-

- Advertisement -

ஸ்ப்ரிங் ஆனியனின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் பயன் தரும் ஸ்ப்ரிங் ஆனியன்!

ஸ்ப்ரிங் ஆனியன் என்பது சுவைக்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் பயன் தருகிறது. அந்த வகையில் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஜிங்க், செலினியம், பொட்டாசியம், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாதுக்கள் அடங்கியிருக்கிறது.சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் பயன் தரும் ஸ்ப்ரிங் ஆனியன்!

we-r-hiring

இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுண் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது. ஸ்ப்ரிங் ஆனியன் எடுத்துக் கொள்வதால் மூக்கடைப்பு, சளி, போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதில் உள்ள நார், குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்து மலச்சிக்கல், வாயு, அமிலம் ஆகியவற்றை குறைக்க வழி வகை செய்கிறது.

ஸ்ப்ரிங் ஆனியன் இன்சுலின் செயலை மேம்படுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தி சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகளை குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

அடுத்தது ஸ்ப்ரிங் ஆனியன் கண்பார்வைக்கும், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் பயன் தருகிறது. இதில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை பலப்படுத்தும். சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் பயன் தரும் ஸ்ப்ரிங் ஆனியன்!எனவே ஸ்ப்ரிங் ஆனியனை சாலட், சூப், இட்லி, தோசை, நூடுல்ஸ், உப்புமா, வறுவல், பிரைடு ரைஸ் போன்றவற்றில் பயன்படுத்தலாம். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

 

MUST READ