தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!
தமிழ்நாடு என்பது பல நூற்றாண்டுகளாகவே சத்தான, சுவை மிகுந்த, உடல் நலத்தை பேணும் பாரம்பரிய உணவுகளுக்கு பெயர் பெற்றது. தலைமுறை தலைமுறையாய் பல சத்தான உணவு வகைகள் தினசரி உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரகு சாதம், கம்பு சாதம், சாமை சாதம், தினை சாதம், உளுந்தஞ்சோறு, பருப்பு சாதம், குதிரைவாலி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், அத்திக்காய் கூட்டு, எலுமிச்சை சாதம், புளி சாதம், திப்பிலி ரசம், மிளகு ரசம், சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு பொங்கல் போன்றவை ஏராளமான நன்மைகளை தருகிறது. அதாவது இந்த உணவு வகைகள் உடல் எடையை குறைக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் இதில் அதிக அளவிலான நார் சத்துக்கள் இருப்பதால் ஜீரணக் கோளாறு தீரும். ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும். இந்த உணவுகளின் மூலம் அதிக அளவிலான ஆற்றல் கிடைக்கும். உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு நீண்ட நேரம் பசி இல்லாமல் நிரம்பி இருக்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த உணவு வகைகள் பாதுகாப்பானது.

இது தவிர திணை அரிசி உப்புமா, ஆவாரம் பூ இட்லி, ரவா தோசை, கேழ்வரகு புட்டு, கோதுமை புட்டு, இடியாப்பம், முடக்கத்தான் கீரை தோசை போன்றவைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஜீரணத்தை தூண்டும். சளி, காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றை குறைக்கும். அடுத்தது எலும்பு பலவீனம், தசை வலி ஆகியவற்றுக்கும் நல்ல தீர்வு தரும். இதில் உள்ள சத்துக்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். ரத்த சோகையில் இருந்து பாதுகாக்கும்.
மேலும் கேழ்வரகு களி, கோதுமை களி, உளுந்தங்களி, வெந்தயக்களி ஆகியவை பெண்களுக்கு வலிமை தரும் உணவு வகைகள். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. இந்த களி வகைகள் எலும்புகளின் வலிமை, தசை பலம், நரம்பு செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும். ரத்தத்தை தூண்டும்.
சைடிஷ் வகைகளான சாம்பார், தேங்காய் சட்னி, கீரை, வடகம், ஊறுகாய், அப்பளம், தயிர், வறுத்த மிளகாய் ஆகியவைகளும் உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. தேங்காய் சட்னியில் நல்ல கொழுப்புகள் உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கும்.
எனவே நம் முன்னோர்கள் பயன்படுத்திய இந்த உணவு கலாச்சாரத்தை நாள்தோறும் பின்பற்றினால் நாமும் ஆரோக்கியமாக வாழலாம்.


