spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிவீரராகவபுரம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் செல்வதால் பரபரப்பு…

வீரராகவபுரம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் செல்வதால் பரபரப்பு…

-

- Advertisement -

பூவிருந்தவல்லி அருகே வீரராகவபுரம் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் என குவியல் குப்பைகள் கொட்டப்படுவதால், ஏரி மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வீரராகவபுரம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் செல்வதால் பரபரப்பு…பூவிருந்தவல்லி அருகே பாரிவாக்கம், திருவேற்காடு எல்லையில் வீரராகவபுரம் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தற்போது பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால்  சட்டவிரோதமாக ஏரி மற்றும் கரையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை கழிவுகள் மருத்துவ கழிவுகள் மட்டுமல்லாமல் டன் கணக்கில் காலாவதியான ஐஸ்கிரீம்கள் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த காலாவதியான பொருட்களை அங்குள்ள ஒரு சிலர் எடுத்துச் செல்கின்றனர்.

மேலும் கால்நடைகளும் காலாவதி ஆன பொருட்களை உண்டு வருவதால், பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது ஏரி மற்றும் கரையோரம் பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், ஏரி மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஓபிஎஸ் புது கட்சி! யாருடன் கூட்டணி? திமுகவுடன் டீலிங்கா? பத்திரிகையாளர் இதயா நேர்காணல்!

we-r-hiring

MUST READ