நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 19-ம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டத் தொடர். இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடவுள்ள நிலையில், 14 மசோதாக்களை மத்திய அரசு இரு அவைகளிலும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் விவகாரம் , டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் குண்டு வெடிப்புகள் , எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. கடந்த மழைக்கால கூட்டத் தொடரை போல் அல்லாமல் சுமூகமாக குளிர்கால கூட்டத் தொடரை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசும் கோரிக்கை வைத்துள்ளது. இன்று 11- மணிக்கு நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – வெற்றி, தோல்விகளுக்கு அப்பால்…


