இண்டிகோ பெரும் நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தடங்கலால் விமான பயணிகள் கடும் அவதியில் சிக்கியுள்ளனர். தொடர்ச்சியாக நான்காவது நாளாக இண்டிகோ சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் பணியாளர் குறைபாடு காரணமாக, இன்று மட்டும் 25க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இண்டிகோ சேவை முடங்கியதால் ஏர் ஏசியா, கோ ஏர் உள்ளிட்ட பிற விமான நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. விமான டிக்கெட் விலை சாதாரணத்தை விட 4 முதல் 10 மடங்கு வரை உயர்ந்து இருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை → டெல்லி : ரூ.62,000
சென்னை → கொச்சி : ரூ.27,000
சென்னை → மும்பை : ரூ.28,000
சென்னை → மதுரை : ரூ.13,000 (வழக்கமாக ரூ.5,000)
சென்னை → கொல்கத்தா : ரூ.71,000
டெல்லியில் இருந்து சென்னை வருவதற்கான விமான சேவைகள் இப்போது முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முக்கிய விமான நிறுவனம் செயலிழந்ததால், மற்ற நிறுவனங்கள் கட்டணத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை மற்றும் பணியாளர் பிரச்சனைகள் அதிகரித்ததால், விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் விமான இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவசர மற்றும் அவசியமான பயணங்களுக்கும் கூட அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
1000 அடி உயரமுள்ள மலை உச்சியில் பதுங்கிய ரவுடி… 10மணி நேர போராட்டத்திற்கு பின் கைது…


