தமிழ்நாடு அரசு, தாய்-தந்தையை இழந்து தவித்த குழந்தைகளுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல்வேறு உதவிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்திற்குத் துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பூட்டைகிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் வசந்தி தம்பதியினரின் நான்கு பிள்ளைகளான லாவண்யா, ரீனா, ரிஷிகா மற்றும் அபினேஷ் ஆகியோர் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உதவியால் அரசின் ஆதரவைப் பெற்று, பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றனர்.

கூலித் தொழிலாளர்களான பெற்றோரை இழந்த நிலையில், லாவண்யாவிற்கு ரூ.2.5 லட்சம் மதிப்பில் வீட்டு மனை, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.55 லட்சம் மதிப்பில் வீடு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
ரிஷிகா மற்றும் அபினேஷ்-க்கு ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவி, பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை கல்வியைத் தொடர உதவும் வகையில் அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி (Beauty and Hair Skill Training) பெறுவதற்கான ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு குழந்தைகளும் “இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – டி.டி.வி. தினகரன்


