spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகளைகட்டிய தொட்டபெட்டா…விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்…

களைகட்டிய தொட்டபெட்டா…விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்…

-

- Advertisement -

விடுமுறை நாளான நேற்று ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.களைகட்டிய தொட்டபெட்டா…விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்…மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடமும், இந்தியாவின் உயர்ந்த சிகரமுமான தொட்டபெட்டா கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 623 மீட்டர் உயரம் கொண்டது. இங்கிருந்து நீலகிரியின் பெரும்பாலான இடங்களை காணமுடியும். குறிப்பாக, சூரியன் மேற்கில் மறைவதை காண இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். தொட்டபெட்டா சிகரம் உதகையில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளான நேற்று மழையின்றி லேசான வெயிலுடன் இதமான காலநிலை நிலவியது. இதன் காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கணிசமான அளவு சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக நகருக்கு வெளியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களான பைக்காரா படகு இல்லம், அருவி, ஊசிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து இயற்கை காட்சிகளை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்ததால் களைகட்டி காணப்பட்டது.

பனையூருக்கு வரும் அமித்ஷா! விஜய் சர்வே பித்தலாட்டங்கள்! எடப்பாடி, என்டிஏ கதை முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

we-r-hiring

MUST READ