தனது 76-வது வயதில் அடியெடுத்து வைக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் கலைத்துறையில் 50 ஆண்டுகள் கடந்துள்ளார். இதனை சிறப்பிக்கும் வகையில், அவருக்கு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இன்று ரஜினிகாந்த் தனது 76-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இதனிடையே இன்று பிறந்த நாள் காணும் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரஜினிகாந்த், வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்! ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு உள்ளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
சாத்தூரில் கலர் கோலப்பொடி தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது


