தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், தி இந்து நாளேடு வெளியிட்டுள்ள புள்ளி விவரக் கட்டுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘தி இந்து’ நாளிதழில் வெளியாகியிருக்கும் ஆய்வில், இளம் வயதினரின் இறப்பு, பாலினப் பாகுபாடு, அதிகப்படியான நீக்கங்கள் போன்ற பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 75,018 வாக்குச்சாவடிகளில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதில், 14 வாக்குச்சாவடிகளில் நீக்கப்பட்டவர்களில் 50 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நீக்கப்பட்டவர்களில் 84% பேர் 50 வயதிற்கு உட்பட்டவர்கள்.
8,613 வாக்குச்சாவடிகளில் சராசரியை விட இருமடங்கு அதிகமாக (260-க்கும் மேற்பட்டோர்) வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கடலூர் புவனகிரி NLC மேல்நிலைப் பள்ளியில் அதிகபட்சமாக 861 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
35 வாக்குச்சாவடிகளில் நீக்கப்பட்டவர்களில் 75% க்கும் அதிகமானோர் பெண்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தூத்துக்குடி திருச்செந்தூர் பகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் நீக்கப்பட்ட 110 பேரில் 95 பேர் (86%) பெண்கள்.
495 வாக்குச்சாவடிகளில் அனைத்து நீக்கங்களும் (100%) இறப்பு என்ற காரணத்திற்காகவே செய்யப்பட்டுள்ளன. தஞ்சாவூர் பாபநாசத்தில் உள்ள ஒரு பள்ளியில் 99.2% நீக்கங்கள் இறப்பினால் நிகழ்ந்தவை.
6,139 வாக்குச்சாவடிகளில் சராசரியாக 74-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் “இங்கு இல்லை” (Absent) என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளனர். 172 வாக்குச்சாவடிகளில் “நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள்” பிரிவில் பெண்கள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆய்வில் மதுரை, திருப்பூர், தஞ்சாவூர், திருவள்ளூர் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் அதிகப்படியான முரண்பாடுகளைக் கொண்டுள்ளன.
சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்


