spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவா் தந்தை பெரியார் – முதல்வர் புகழாரம்

தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவா் தந்தை பெரியார் – முதல்வர் புகழாரம்

-

- Advertisement -

தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி சென்னை, அண்ணா சாலையில் அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவா் தந்தை பெரியார் – முதல்வர் புகழாரம்பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி சென்னை, அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இது தொடர்பாக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்! தமிழர்கள் தலைகுனியாமல், ஆதிக்கத்துக்கு அடிபணியாமல், பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி! பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே! என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

புளுபேர்ட் – 6 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட்!

we-r-hiring

MUST READ