தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது தாவர பானங்களை தேநீர் என்று குறிப்பிடக் கூடாது என்று FSSAI உத்தரவிட்டுள்ளது.
தேயிலையில் தயாரிக்கப்படாத எந்த பானத்திற்கும் Tea என பெயர் வைக்கக் கூடாது என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. கேமல்லியா சினென்சிஸிலிருந்து தயாாிக்கப்படும் பானங்களை மட்டுமே தேநீா் என்று குறிப்பிட வேண்டும். மூலிகை மற்றும் பிற தாவரப் பொருட்களை கொண்டு தயாாிக்கும் பானங்களை தேநீா் என்று குறிப்பிடக் கூடாது. க்ரீன் டீ, இன்ஸ்டன்ட் டீ, காங்க்ரா டீ உள்ளிட்ட தேயிலை பயன்படுத்தும் பானங்களை மட்டுமே தேநீா் என்று குறிப்பிட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உணவுப் பாதுகாப்பு ஆணையா்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், Herbal Tea, Flower Tea என பல்வேறு வகையில் தேநீர் விற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.



