spot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைதமிழ்நாட்டில் டிசம்பர் 29 வரை பனிமூட்டம் நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் டிசம்பர் 29 வரை பனிமூட்டம் நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

-

- Advertisement -

தமிழ்நாட்டில் டிசம்பர் 29 வரை பனிமூட்டம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் டிசம்பர் 29 வரை பனிமூட்டம் நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்தமிழ்நாட்டின் டிசம்பர் 29 வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டிசம்பர் 29 மற்றும் 30-ல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தென்கடலோர தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 29 மற்றும் 30-ல் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், டிசம்பர் 31-ஆம் தேதி தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இன்றிரவு மற்றும் நாளை அதிகாலையில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தமிழகம் புதுச்சேரியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு, மூன்று டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும். சென்னையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை நகரில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கெட்டுப்போகும் காய்கறி, பழங்களை கோடிகளாக மாற்றும் வித்தை!இலவச பயிற்சி…முதலில் வருபவருக்கே முன்னுரிமை…

we-r-hiring

MUST READ