வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 2 நாட்களில் 5,43,155 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரவித்துள்ளது.


தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் மூலம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், பெரும் விவாதங்களையும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பொதுமக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 86 ஆயிரத்து 362 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர்.
எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நடவடிக்கைக்கு பிறகு, இதுவரை மொத்தமாக 7 லட்சத்து 28 ஆயிரத்து 432 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குறைபாடுகள் மற்றும் நீக்கங்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க 9 ஆயிரத்து 410 பேர் படிவம் 7 மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 5 லட்சத்து 43 ஆயிரத்து 155 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை அளித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவத்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து, தவறுகள் இருந்தால் உரிய படிவங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
நவீன கல்வி மேம்பாட்டு கருவியாக செயல்படும் பள்ளிப் பார்வை 2.0 செயலி….


