spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநவீன கல்வி மேம்பாட்டு கருவியாக செயல்படும் பள்ளிப் பார்வை 2.0 செயலி….

நவீன கல்வி மேம்பாட்டு கருவியாக செயல்படும் பள்ளிப் பார்வை 2.0 செயலி….

-

- Advertisement -

பள்ளிப் பார்வை 2.0 செயலி கல்வித் துறையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றி மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதிலிருந்து பள்ளி மேலாண்மை வரை அனைத்து அம்சங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது.நவீன கல்வி மேம்பாட்டு கருவியாக  செயல்படும் பள்ளிப் பார்வை 2.0 செயலி….பள்ளிப் பார்வை 2.0 செயலி மூலம் ஒவ்வொரு மாணவரின் பாட வாரியான செயல்திறன், கற்றல் நிலை மற்றும் முன்னேற்றம் நேரடியாக பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவதால் மாணவர்களுக்கு தேவையான கற்றல் பிரச்சனைகள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதல்களை உடனுக்குடன் வழங்க முடிகிறது. ஆசிரியர்களின் கற்பித்தல் தரம், வகுப்பு மேலாண்மை திறன், மாணவர்களுடன் உள்ள ஈடுபாடு போன்ற பகுதிகளில் கிடைக்கும் தரவுகள் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன. பள்ளிகளுக்கிடையே செயல்திறன் ஒப்பீடு செய்யப்படுவதால் தர உயர்வு நோக்கில் போட்டி உணர்வும் முன்னேற்ற நோக்கமும் உருவாகிறது.

பெற்றோருடன் பள்ளியின் இணைப்பு அதிகரிக்கிறது. வருகைப் பதிவு, மதிப்பெண், செயல்பாடுகள் போன்ற விவரங்கள் பெற்றோருக்கு எளிமையாக சென்றடைகின்றன. இதனால் மாணவர்கள் பள்ளி மற்றும் பெற்றோர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறார்கள். பள்ளி கட்டிடம், குடிநீர், கழிப்பறை, நூலகம், ஆய்வகம், விளையாட்டு வசதிகள் போன்ற அடிப்படை அம்சங்களின் நிலை முறையாக பதிவாகுவதால் தேவையான பராமரிப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளைச் சரியான நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. கையெழுத்து பதிவுகள் மற்றும் நிர்வாகப் பணிகளின் சுமை குறைவதால் ஆசிரியர்கள் கற்பித்தலுக்கான அதிக நேரத்தை பெறுகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் கல்வித் தர முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நவீன கல்வி மேம்பாட்டு கருவியாக பள்ளிப் பார்வை 2.0 செயலி செயல்படுகிறது.

we-r-hiring

 

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளாதீர்கள் – நிதி ஆயோக் உறுப்பினர், டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர்

MUST READ