spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு!!

2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு!!

-

- Advertisement -

தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு!!

2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் கரும்புகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு நேரடியாக பயன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கரும்பு கொள்முதல் விலை மின்னணு பரிவர்த்தனை (ஆன்லைன்) முறையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 6 அடிக்கு குறைவான பன்னீர் கரும்புகளை கொள்முதல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவித்துள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி குறித்து…”கூடா நட்பு கேடில் முடியும்” – நெல்லை முபாரக் பதிலடி

MUST READ