spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுகவுடன் கூட்டணி குறித்து…”கூடா நட்பு கேடில் முடியும்” - நெல்லை முபாரக் பதிலடி

அதிமுகவுடன் கூட்டணி குறித்து…”கூடா நட்பு கேடில் முடியும்” – நெல்லை முபாரக் பதிலடி

-

- Advertisement -

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு கூடா நட்பு கேடில் முடியும் என எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் பதிலளித்தாா்.அதிமுகவுடன் கூட்டணி குறித்து…”கூடா நட்பு கேடில் முடியும்” - நெல்லை முபாரக் பதிலடிநெல்லையில் எஸ்.டி. பி.ஐ., கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “எஸ் டி பி ஐ கட்சி சார்பில் அனைத்து தமிழர்களுக்கும் புத்தாண்டு வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் கணக்கை துவங்குகிற விதத்தில் எங்கள் பணிகள் தொடங்கி இருக்கிறது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சட்டசபையில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் குரல் எழுப்புவார்கள். தாமிரபரணியை காப்பாற்ற அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆணையத்தை அமைக்க வேண்டும்.

பொருநை  அருங்காட்சியகம் நெல்லைக்கு பெருமை. அதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறந்து வைத்தார். கொண்டு வந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல காயிதே மில்லத் பெயரில் நூலகம் விரைந்து திறக்க வேண்டும். எஸ் ஐ ஆர் பணிகளில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைப்பதற்காக படிவம் 6 ஐ நிரப்பி கொடுத்தால் அதிகாரிகள் வாக்காளர்களை அலைக்கழிக்கிறார்கள். எப்படியாவது தமிழகத்தில் வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று செயல்படுகிறது தேர்தல் ஆணையம். மாஞ்சோலை தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பது சரியல்ல. போராடிவரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக சம ஊதியம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

we-r-hiring

உங்களுடைய கூட்டணியை முடிவு செய்து விட்டீர்களா? என்பது குறித்த கேள்விக்கு, “ஜனவரியில் அறிவிப்போம். இவர்களில் கண்டிப்பாக எஸ் டி பி ஐ ஒரு பங்கெடுப்பு இருக்கும். போதை பொருள்களை தடுக்க அரசு பொதுமக்களை இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் முழுவதுமாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். நடிகர் விஜயின் தாக்கம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். அரசியல் பொதுவெளியில் செய்யக்கூடிய விஷயம் அதை வீட்டுக்குள் இருந்து கொண்டு செய்ய முடியாது. நடிகர் விஜய்க்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரிதானே. கரூர் சம்பவத்தில் மக்கள் உயிரிழந்திருப்பதால், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு என்று சொன்னாலே வேப்பங்காயாக கசக்கிறது. தமிழர்களை வஞ்சிப்பதும் தமிழ் மொழியை வாழ்த்துவதும் என்ன பிரயோஜனம் இருக்கிறது என்று தெரியவில்லை. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் டிலிமிடேஷனில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என பதிலளித்தாா்.

அதிமுகவுடன் கூட்டணி 2026 ல் சேர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “நாங்கள் ஆரம்பத்திலேயே கூறிவிட்டோம். கூடா நட்பு கேடில் முடியும். பாஜகவின் நடவடிக்கையில் மக்களை மதங்களாக பிளவுப்படுத்துகிறது. தமிழ்நாடு பெரியாரால் அண்ணாவால், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால், காயிதே மில்லத் வளர்க்கப்பட்ட சமூக நீதி நாடு. பாஜகவால் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் தமிழகத்தில் வர முடியவில்லை என்ற காரணம் என்னவென்றால் மக்கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மாநில பொதுக்குழுவைக் கூட்டி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்“ என்று கூறினார்.

பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.36 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு!!

MUST READ